சிங்கப்பூரை நோக்கி திரும்பியிருக்கும் உலக நாடுகளின் பார்வை..!

226

அமெரிக்க அதிபர் டிரம்ப் – வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு சிங்கப்பூரில் தொடங்கியுள்ளது.

எலியும் பூனையுமாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உனும், தென் கொரியாவின் முயற்சியால் ஒருவழியாக பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டனர். இதையடுத்து, இரு நாடுகளின் நட்பு நாடாக கருதப்படும் சிங்கப்பூரில் இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் இந்திய நேரப்படி காலை 6:30 மணியளவில் இருநாட்டு தலைவர்களுக்கு மத்தியிலான சந்திப்பு தொடங்கியுள்ளது. ட்ரம்பும், கிம்மும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதன்முறை என்பதால் உலக நாடுகளின் பார்வை சிங்கப்பூரை நோக்கி திரும்பியுள்ளது.

இதில் பங்கேற்க நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் சிங்கப்பூர் வந்தடைந்தனர். சந்திப்பு முடிந்த பின்னர் நாளை இரவு சிங்கபூரில் இருந்து அமெரிக்காவிற்கு அதிபர் டிரம்ப் புறப்படுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.