மாணவர்களை ஆபாச நடனம் ஆட வைத்த கொடுமை நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கத்தினர் போராட்டம் !

750

அரியலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஆபாச நடனம் ஆடவைத்த, தலைமை பொறுப்பு ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ராயம்புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை பொறுப்பு ஆசியரியராக தர்மராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் பங்கேற்று நடமாடினர். தலைமை ஆசிரியர் ஆபாச நடனம் சொல்லிக் கொடுத்ததோடு, அவரும் மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடியதாக தெரிகிறது. இதனை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.