மதுபானத்திற்கு பெண்களின் பெயர்களை வைக்க வேண்டும் மகாராஷ்டிர மாநில அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

333

மதுபான விற்பனையை அதிகரிக்க அவற்றுக்கு பெண்களின் பெயரை வைக்க வேண்டும் என்று கூறியதற்காக மகாராஷ்டிர மாநில நீர்வளத் துறை அமைச்சர் கிரீஷ் மஹாஜன் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
மஹாராஷ்டிர அமைச்சர் கிரிஸ் மகாஜன், மது விற்பனையை அதிகரிக்க பெண்களின் பெயர்களை மதுபானத்திற்கு வைக்க வேண்டும் என ஒரு கூட்டத்தில் கருத்து தெரிவித்தார். மேலும் புகையிலைப் பொருட்களுக்கும் பெண்களின் பெயர்களையே சூட்டலாம் என கூறினார்.
இதனையடுத்து அவரது கருத்திற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மஹாராஷ்டிர மகளிர் அமைப்பினர் கிரிஸ் மகாஜன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கூட்டணி கட்சியான சிவசேனா , அமைச்சரின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் கிரிஸ் மகாஜன் தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.