பணியிடங்களில் பாலியல் தொந்தரவிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 32 மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு புகார் கமிட்டி அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும் என ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, பணியிடங்களில் பெண்களை பாதுகாக்கும் சட்டம் தொடர்பாக, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி, தமிழகத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 32 மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.