சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பெண்களுக்கு வயதை நிரூபிக்கும் சான்று கட்டாயம் என தேவசம் நிர்வாகம் அறிவிப்பு.

876

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பெண்கள் இனி வயதை நிரூபிக்கும் வகையில் ஏதேனும் ஒரு ஆவணத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் வரக்கூடாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பல பெண்கள் தங்கள் வயதை மாற்றிக் கூறி கோயிலுக்கு வருவதை வழக்கமாக்கி வருவதால், வயதுச்சான்று கட்டாயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோயிலுக்கு வரும் பெண்கள் தங்கள் வயதை நிரூபிக்கும் ஆவணத்தைக் காட்ட வேண்டும் எனவும், இந்த புனித யாத்திரை காலத்தில் இருந்தே இந்த விதி அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதார் உள்ளிட்ட அரசு ஆவணங்களில் உள்ள வயது ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.