பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் ஃபிளே ஆஃப் சுற்றில் இந்தியா – இத்தாலி அணிகள் மோதல்..!

745

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் ஃபிளே ஆஃப் சுற்றில் இத்தாலியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

லண்டனில் நடைபெற்ற பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் ஃபிளே ஆஃப் சுற்றில் இந்தியா – இத்தாலி அணிகள் மோதின. ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 15வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்தது. இதை தொடர்ந்து, முதல் பெனாலிட்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனை நேஹா கோயல், இரண்டாவது கோலை அடித்து அசத்தினார்.

இறுதி நேரத்தில் கிடைத்த இரண்டாவது பெனாலிட்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வந்தனா கட்டாரியா மூன்றாவது கோலை அடித்து, இந்தியாவிற்கான வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.