வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்..!

351

கேரளாவில் வெள்ளத்தில் இருந்து கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

கேரளாவில் தொடர்ந்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா என்ற இடத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சஜிதா ஜபீல் என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் வீட்டைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்ததால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஜீதா ஜபீலுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேய்யும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.