கருணாநிதியின் உடல்நலக்குறைவு செய்தியறிந்து திருக்குவளையிலிருந்து 85 வயது மூதாட்டி ஒருவர் கோபாலபுரத்துக்கு வருகை..!

636

கருணாநிதியின் உடல்நலக்குறைவு செய்தியறிந்து திருக்குவளையிலிருந்து 85 வயது மூதாட்டி ஒருவர் கோபாலபுரத்துக்கு வருகை தந்தார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிறுநீரக தொற்று மற்றும் ரத்த அழுத்த குறைவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கும், காவேரி மருத்துவமனைக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே, கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து ரத்தினாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி, கோபாலபுரத்திற்கு தனியாக பேருந்தில் வந்தார். கருணாநிதியின் உடல் நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்து விட்டு அவர் திரும்பச் சென்றார்.