தெலுங்கானாவில் மகனின் சடலத்துடன் இரவு முழுவதும் சாலையோரம் ஒரு பெண் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

450

தெலுங்கானாவில் மகனின் சடலத்துடன் இரவு முழுவதும் சாலையோரம் ஒரு பெண் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் வசித்து வரும் ஈஸ்வரம்மாவின் 10 வயது மகன் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மகனின் உடலை குளிர்பதன பெட்டியில் வைத்து தான் வசித்து வரும் வாடகை வீட்டுக்கு ஈஸ்வரம்மா எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் ஜெகதீஷ் குப்தா வீட்டின் உள்ளே உடலை வைக்க அனுமதிக்கவில்லை. இதனால் இரவு முழுவதும் தன் மகனின் உடலை கொட்டும் மழையில் நனைந்தபடி, சாலையோரம் அவர் வைத்துள்ளார். போலீஸார் எச்சரிக்கை செய்ததை தொடர்ந்து உடலை வீட்டிற்குள் வைக்க ஜெகதீஷ் அனுமதித்துள்ளார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.