ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை..!

335

அமெரிக்காவின் பொருளாதார தடையை முறியடிக்கும் வகையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.

ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. அத்துடன், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடம் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து தங்களை வெளியேற்றுவது சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ள ஈரான், ஏற்றுமதியை தொடர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் ஈரான் வழங்கி வருகிறது.