விநாயகர் சதுர்த்தி விழா – முதல்வர் வாழ்த்து

304

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஞான முதல்வனாகிய விநாயக பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் மக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை , சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படையிலிட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாக கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். விநாயகர் திருவருளால் மக்கள் அனைத்து நலன் வளங்களை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.