விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 8 ஆவது முறையாக…

153

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 8 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்று வந்தது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர், குரோஷியாவின் மரியன் சிலிச்சுடன் மோதினார். ஆட்டம் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய ரோஜர் பெடரர், 6க்கு 3 , 6க்கு 1, 6-க்கு4 என்ற
நேர் செட்கணக்கில் வென்று விம்பிள்டன் பட்டத்தை தட்டி சென்றார். விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக வென்ற வீரர் என்ற சாதனையையும், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 19 முறை பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் ரோஜர் பெடரர் படைத்துள்ளார்.