விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்குவடார் நாடு குடியுரிமை வழங்கி உள்ளது..!

357

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்குவடார் நாடு குடியுரிமை வழங்கி உள்ளது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இதையடுத்து அவரைக் கைது செய்ய அமெரிக்கா மும்முரம் காட்டியது. இதையடுத்து லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சமடைந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஈக்குவடார் தூதரகத்தில் இருக்கும் அசாஞ்சேவுக்கு ஈக்குவடார் நாடு நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது. இதையடுத்து தான் ஈக்குவடார் நாட்டின் குடிமகன் என்பதைக் குறிக்கும் வகையில் அந்நாட்டு சின்னம் பொறித்த டி சர்ட் அணிந்த படத்தை அசாஞ்சே வெளியிட்டுள்ளார்.