இலங்கைக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் 4 விக்கெட்டுகளை தோனி சாதனை!

1060

இலங்கைக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் 4 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் தோனி சாதனை படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் இருவது ஓவர்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பிங்கில் 2 கேட்ச், 2 ஸ்டெம்பிங் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரே இன்னிங்சில் 3 முறை 4 விக்கெட்டுகள் எடுத்து தோனி புதிய சாதனை படைத்துள்ளார். இவரை தொடர்ந்து வில்லியர்ஸ், கில்கிறிஸ்ட் ஆகியோர் 2 முறை இந்த சாதனையை படைத்துள்ளனர். மேலும், 20 ஓவர் போட்டிகளில் 200 முறை ஆட்டமிழக்க செய்தும் தோனி சாதனை படைத்துள்ளார். இதேபோன்று, 133 கேட்ச் பிடித்து இலங்கை வீரர் சங்ககராவின் சாதனையையும் தோனி சமன் செய்துள்ளார்.