ஒரு வருடத்தில் மூன்று முறை ஒயிட்வாஷ் மோசமான சாதனையை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி!

404

ஒரு வருடத்தில் மூன்று முறை ஒயிட்வாஷ் ஆன முதல் கிரிக்கெட் அணி என்ற மோசமான சாதனையை இலங்கை படைத்துள்ளது.

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. நான்கு போட்டிகளில் தொடர்ந்து பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் நேற்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி 103 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் பாகிஸ்தானிடம் ஒயிட்வாஷ் ஆன இலங்கை அணி, ஒரு வருடத்தில், மூன்று முறை ஒயிட்வாஷ் ஆன முதல் கிரிக்கெட் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிடம் ஒயிட்வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது.