வாட்ஸ்அப் தகவல்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..!

812

வாட்ஸ்அப் தகவல்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோரின் அந்தரங்க தகவல்கள் வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துவதை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில்
மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் வாட்ஸ் அப் தகவல்களை பாதுகாப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து, வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் தகவல்களை மூன்றாவது நபருக்கு அளிக்கிறார்களா என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.