மேற்கு வங்கம் உள்ளாட்சி தேர்தலில் பெரும் வன்முறை – ஒருவர் உயிரிழப்பு, பத்திரிக்கையாளர்கள் படுகாயம்.

531

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலின்போது வெடித்த வன்முறையில் ஒருவர் பலியானார். 5 பத்திரிக்கையாளர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்…

பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் முதல்கட்டமாக 38 ஆயிரத்து 608 இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பா.ஜ.கவினருக்கும் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சதன்பூர் பகுதியில் நிகழ்ந்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்தனர். பிர்பாரா பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற 5 பத்திரிக்கையாளர்களை கலவரக்காரர்கள் கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முர்ஷிதாபாத் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.கவினரிடையே வெடித்த வன்முறையால் அங்கு வாக்குபதிவு நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.