மருத்துவர்களின் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு – ஹர்ஷ்வர்தன் உறுதி

97

பீகாரில் என்செபாலிடிஸ் என்ற மூளைக்காய்ச்சலால் 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அங்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் மருத்துவர்களின் போராட்டம் குறித்து விளக்கம் கேட்டிருப்பதாகவும், பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுக்க அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பீகாரில் என்செபாலிடிஸ் என்ற மூளைக்காய்ச்சலால் 436 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், அங்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.