டோம்கல் வாக்குச்சாவடி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!

222

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம், முர்சிதாபாத் தொகுதிக்குட்பட்ட டோம்கல் நகராட்சிப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, வாக்குச்சாவடி வெளியே திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது, மர்மநபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அருகில் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக, டோம்கல் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.