மாநிலங்களவையின் புதிய துணை தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு..!

296

மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங் 125 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

மாநிலங்களவை துணை தலைவராக இருந்த ஜே.பி.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இதனையடுத்து இந்த பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஹரிவன்ஷ் நாராயண் சிங், காங்கிரஸ் சார்பில் ஹரி பிரசாத் ஆகியோர் நேருக்குநேராக பலப்பரீட்சை நடத்தினர். இறுதியாக இன்று நடைபெற்ற வாக்கு பதிவில் ஹரிவன்ஷ் நாராயண் சிங் 125 வாக்குகள் பெற்று மாநிலங்களவை துணை தலைவராக வெற்றிபெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஹரி பிரசாத் 105 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயணன் சிங் ஐக்கிய ஜனதா தளத்தை தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.