தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

993

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள் கர்நாடகாவில் இருந்து லட்சத் தீவுகள் வரை வளி மண்டலத்தின் மேலடுக்கில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது . இதன் காரணமாகவும் வெப்ப சலனம் காரணமாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் கரையோரங்களில், 3 மீட்டர் அளவுக்கு அலைகள் எழும்பக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.