தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

446

தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.