ஒன்பது நகரங்களில் சுட்டெரித்த வெயில் |அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி வெப்பம் பதிவு

211

தமிழகத்தில் ஒன்பது இடங்களில் நூறு டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் வெப்பம் சுட்டெரிக்கிறது. கோடை மழை காரணமாக சில இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்தாலும், கடலோர மாவட்டங்கள் தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்தநிலையில், ஒன்பது இடங்களில் இன்று நூறு டிகிரிக்கும் மேல் வெயில் பதிவானது. அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 104 டிகிரியும், கரூர் பரமத்தி, கடலூரில் 104 டிகிரி வெப்பமும் பதிவானது. மதுரை மற்றும் வேலூரில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், தூத்துக்குடியில் 102 டிகிரியும், நாகை மற்றும் நெல்லையில் 101 டிகிரியும், திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவானது.