தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய கூடும் : வானிலை ஆய்வு மையம்..!

668

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளதாக தெரிவித்தார். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக கூறிய பாலச்சந்திரன், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்தார்.