வெப்பச்சலனம் காரணமாக ஒரிரு இடங்களில் பலத்து காற்றுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

601

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய இடி மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம் மற்றும் திசை மாறுபாடு காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய இடி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.