கோடைக் காலத்தில் 153 மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்படும் – இந்திய வானிலை ஆய்வு மையம்..!

673

கோடைக் காலத்தில் 153 மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் போதிய மழை பொழியாததால் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில் இந்தமுறை மிகவும் சொற்பமான அளவே மழை பெய்துள்ளது. வழக்கமாக பொழிய வேண்டிய மழையில் 63 சதவீதம் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மழை பொழிவை அடிப்படையாக கொண்டு 588 மாவட்டங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின்படி 153 மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் வட, மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களை சேர்ந்த மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. இதில் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.