தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

189

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான மழை பெய்து வருகிறது. அசாம், மேகாலாயா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தால் மிதக்கின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல் ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.