வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழக பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வலுவான காற்று வீசுவதால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை மற்றும் புறநகரில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.