காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்

184

காற்றின் வேகம் காரணமாக நான்கரை மீட்டர் வரை அலைகள் எழும்பும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டியுள்ள கடற்பகுதியில் தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளச்சல் முதல் கோடியக்கரை வரை உள்ள கடற்பகுதியில் மூன்றரை முதல் நான்கரை மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் எனவும், வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.