தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்..!

1124

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையே அல்லது, இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நாகர்கோவில் மற்றும் மணிமுத்தாறில் தலா 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.