தமிழகத்தில் அடுத்த வாரம் உருவாகும் இரண்டு புயல்களால் பெருத்த சேதம் ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

4886

தமிழகத்தில் அடுத்த வாரம் உருவாகும் இரண்டு புயல்களால் பெருத்த சேதம் ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலாவது புயல் 11-ந் தேதி, 2-வது புயல் 15-ந்தேதியில் இருந்து 20-ந்தேதியிலும் கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது புயலின் போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இரு புயல்களும் கடலூருக்கும், ஆந்திராவின் நெல்லூருக்கும் இடையே சென்னையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என்று கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்,
இருபுயல்களும் கரையை கடக்கும்போது, பலத்த காற்றுடன் மழை கொட்டும் என்பதால் அதிக அளவு சேதம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த புயல்களால் 111 சதவீத அளவுக்கு இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் என்று கூறியுள்ள இந்திய வானிலை மையம், இந்த இரு புயல்கள் காரணமாக வடகிழக்கு பருவ மழை வரும் 26-ந்தேதி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.