தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

180

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், சென்னை அருகே கரையை கடந்த வர்தா புயல் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியதாக தெரிவித்தார். காற்றழுத்த தாழ்வு நிலை கேரளம் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ஆத்தூரில் 6 சென்டிமீட்டர் மழையும், குன்னூரில் 5 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளதாக கூறினார்.