நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

286

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். மேலும், வடக்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.