வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

197

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதாக கூறியுள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.