தென் மேற்கு பருவமழை காரணமாக, 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

500

தென் மேற்கு பருவமழை காரணமாக, 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சில தினங்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 13 சென்டி மீட்டர் மழையும், கூடலூர் பஜார், செங்கொட்டையில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.