தமிழகத்தில் ஒருவார காலத்திற்கு வெயிலின் தாக்கம்நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

347

தமிழகத்தில் ஒருவார காலத்திற்கு வெயிலின் தாக்கம்நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. ஆனால், கர்நாடகம், கேரளாவில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்ற மாநிலங்களைவிட குறைவாகவை இருக்கும். இந்த நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.