தென் தமிழகம், புதுவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு !

135

தென் தமிழகம், புதுவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவுவதாக தெரிவித்தார். இதனையடுத்து, மீனவர்கள் நாளை முற்பகல் வரை மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறிய புவியரசன், இரண்டு நாட்களுக்குப்பின் படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவித்தார்.