தமிழகம், புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

775

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதே போல் திண்டிவனத்தில் தலா 7 சென்டி மீட்டர் மழையும்,தேன்கனிக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் தலா 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் , மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.