பல்வேறு மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

554

டெல்லியில் இரவு முழுவதும் பெய்த கொட்டித் தீர்த்த கனமழையால், பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் தத்தளித்தன.

டெல்லியில் நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று அதிகாலை வரை கொட்டித்தீர்த்தது. கனமழையால் டெல்லி மாநகரின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். முழங்கால் அளவு தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், தீன் மூர்த்தி பவன், ஆர்.கே புரம் ஆகிய சாலைகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இத்தனை நாள்களாக டெல்லியை வாட்டிவதைத்த வெயிலிலிருந்து இந்த மழை சற்று இதமளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், உத்தரகாண்ட், ஹரியானா, சட்டீஸ்கர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, கோவா, கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.