அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

255

தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்று மண்டலத்தில் உருவாகியுள்ள மேல்அடுக்கு சுழற்சியால், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணிநேர நிலவரப்படி கடலூரில் 7 சென்டி மீட்டர் மழையும், திருவேற்காடு, பரங்கிபேட்டை ஆகிய பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.