ஒடிசாவில் நடைபெற்ற அதிநவீன ஆயுத சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

123

ஒடிசா மாநிலம் சண்டிபுரில் இந்திய ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 56 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதம் நேற்று சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த ஆயுதம், போர் விமானத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை மிகத்துல்லியமாக ரேடார் மூலம் கணித்து வெடிகுண்டு மூலம் தாக்கும் வல்லமை கொண்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
120 கிலோ எடை கொண்ட ஆயுதசோதனை குறித்து ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுதத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.