இந்தியாவிடம் கெஞ்ச முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது…!

230

தங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷன் மனி, தங்களுடன் கிரிக்கெட் விளையாடுங்கள் என இந்தியா உள்பட எந்த ஒரு நாட்டுடனும் கெஞ்சிக்கொண்டு இருக்க முடியாது என கூறினார். கண்ணியமான முறையில் இந்தியாவுடனான இரு தரப்பு கிரிக்கெட் உறவுகள் மீண்டும் நடைபெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.