இலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச

366

இலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க எந்த வகையிலும் இடமளிக்க மாட்டோம் என எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில், அரசு ஒரே கல்லில் நூறு பறவைகளை கொன்று விட்டதாக கூறினார். தீவிரவாதிகள் குறித்து தற்போது யாரும் பேசுவதில்லை என்றும், தேடுதல் நடவடிக்கையும் முடிவடைந்து விட்டதாகவும் ராஜபக்ச வேதனையுடன் தெரிவித்தார். அரசியல் நோக்கத்திற்காக, இஸ்லாமிய சமூதாயத்தை ஐக்கிய தேசிய கட்சி சிறந்து முறையில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டிய அவர், இஸ்லாமிய தலைவர்களும், அரசை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இஸ்லாமிய அமைச்சர்கள் ராஜினமா காரணமாக, மக்களின் கவனம் பல விஷயங்களில் இருந்து திசை திரும்பியுள்ளது என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.