மேற்கு வங்கம் மாநிலத்தில் மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

92

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் வந்துசெல்லும் வகையில்,ரெயில்வே துறை சார்பில் மலை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரியமான இந்த ரெயிலில் பயணிப்பதற்காகவே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், குர்சியோங் அருகில் ரெயில் வந்துகொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டது. இதில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.