நீர் வளத்தை பாதுகாக்க ஆற்றில் மணல் அள்ளுவதை முற்றிலும் தடை செய்யவேண்டும்- சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

385

நீர் வளத்தை பாதுகாக்க ஆற்றில் மணல் அள்ளுவதை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்று, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்
நதிகளை மீட்பதற்கான பேரணி கோவையில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. ஈஷா யோகா நிறுவனர் சத்குரு தலைமையில் தொடங்கிய பேரணி, கோவையில் இருந்து ஹரித்வார் வரை 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது. 4வது நாளான இன்று இந்தப் பேரணி திருச்சி வந்தடைந்தது. சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், நீர் வளத்தை பாதுகாக்க ஆற்றில் மணல் அள்ளுவதை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்று கூறினார்