ரூ. 4 லட்சம் செலவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.!

87

திருக்கோவிலூர் அருகே 4 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை எம்.எல்.ஏ. பொன்முடி திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின்றி மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் திருக்கோவிலூர் எம்.எல்.ஏ. பொன்முடி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய் ஒதுக்கி, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வழிவகை செய்தார். அதன்படி சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. இதனை எம்.எல்.ஏ. பொன்முடி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..