சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக ஓடியது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் சுத்தகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்தகரிக்கப்பட்டு காடையாம்பட்டி, தொட்டிபட்டி, மற்றும் வீரக்கல்புதூர் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக அனுப்பப்படுகிறது. இதன்படி பி.என்.பட்டி மற்றும் வீரர்கள்புதூர் பேரூராட்சிகளுக்கு நாள்தோறும் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் அனல் மின் நிலையத்தின் புதிய பாலத்தின் வழியாக செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. பின்னர் குடிநீர் வடிகால் ஊழியர்கள் அதனை சரிசெய்தனர். நீண்ட நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை பழுது நீக்கம் செய்து அடிக்கடி தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.