பஞ்சு போன்ற நுரையுடன் தென்பெண்ணை ஆற்றிலிருந்து தண்ணீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்!

290

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அத்துடன் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 15 வருடங்களுக்கு பிறகு அணையிலிருந்து அதிகபடியான நீர் திறந்துவிடுகிறது.
இந்நிலையில் அணையிலிருந்து திடீரென , பஞ்சுக் குவியல் போன்று நுரை பொங்கி வெளியேறியது. இந்த நுரை தண்ணீர் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது.
பெங்களூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் ஆற்றில் கலப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனிடையே நீரின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.
ice_screenshot_20170929-114545