ஆழியாறு அணையில் இருந்து 8ம் தேதி முதல், தண்ணீர் திறக்க உத்தரவு – முதலமைச்சர் பழனிசாமி

288

ஆழியாறு அணையில் இருந்து 8ம் தேதி முதல், தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி, பழைய ஆயக்கட்டு விவசாயிகள், வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆழியாறு அணையிலிருந்து வரும் 8ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டு இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். ஐந்து பழைய வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களின் முதல் போக பாசனத்திற்காக, 120 நாட்கள் ஆழியாறு அணையிலிருந்து ஆயிரத்து 83 மில்லி கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ள அவர், தண்ணீர் திறப்பால், பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளார்.