காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கில் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!

238

காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கில் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு தொழிற்சாலையில் உள்ள கழிவுகள் காவிரியில் கலப்பதாக கூறி, கடந்த 2015ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2வது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் காவிரி உருவாகும் இடத்தில் கழிவுநீர் கலப்பதில்லை என்றும் காவிரி ஆறு செல்லும் வழிகளில் தான் கழிவுநீர் கலக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென் பெண்ணை ஆறும் மிகவும் மாசடைந்து உள்ளதாகவும்,தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அறிக்கை மீது தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் 2 வாரங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.